ஆ.ராசாவின் கையை வெட்டுவோம்… தி.மு.க. என்பது தருதலைக் கட்சி – தெறிக்கவிடும் அமைச்சர் பெருமக்கள்.

உலக அளவில் மிகப்பெரும் இரண்டாவது ஊழலாக கருதப்படும் 2ஜி அலைக்கற்றை ஊழல் ஆ.ராசா, அவரது அழுக்கை மறைப்பதற்காக ஜெயலலிதாவை அவமரியாதையை பேசி வருகிறார். அவருக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.


அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் கைவைத்தால் ஆ.ராசாவின் கையை வெட்டுவோம் என்று முதன்முறையாக கடும் ஆவேசத்துடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை செய்திருக்கிறார்.

மேலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ’ஆ. ராசா பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. ஓட்ட சைக்கிளில் போனவர், தற்போது காரில் சென்று கொண்டிருக்கிறார். அதை அவர் உழைத்து சம்பாதித்தாரா..? தகுதி இல்லாதவர்களுடன் விவாதம் செய்ய நானும் தயாராக இல்லை. மேலும், நான் கோமாளியா..? அல்லது அவர்கள் கோமாளியா..? என்பது தேர்தலில் தெரிய வரும். ஸ்டாலின் நடித்து வருகிறார். திமுக ஒரு தருதலை கட்சி’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞரான ஜோதியே, ஜெ.குற்றமற்றவர் என்று கூறிய பிறகும் ஆ.ராசா தேவையில்லாததை பேசிக்கொண்டிராமல் இனியும் அமைதி காக்கவில்லை என்றால், அவருக்குத்தான் சிக்கல்.