தினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர் பெருமக்கள்.

எப்படியாவது இந்த தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமியும், குருமூர்த்தியும் எவ்வளவோ முயற்சி எடுத்து வருகிறார்கள்.


ஆனால், இந்த விவகாரங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது அ.தி.மு.க. ஏனென்றால், மன்னார்குடி மாஃபியா என்று அழைக்கப்படும் சசிகலா குடும்பம் மீண்டும் உள்ளே நுழைவதை எந்த அ.தி.மு.க. தொண்டரும் விரும்பவே இல்லை என்பதுதான் உண்மை. 

ஆகவே, எம்.ஜி.ஆர். என்ற புனிதர் ஆரம்பித்த கட்சி அ.தி.மு.க., மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வார்த்து எடுக்கப்பட்டு இன்றைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வருகிறது. இதில் அ.ம.மு.க.வுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடக் கூறியிருக்கிறார். 

அதேபோன்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும், அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைப்புக்கு சாத்தியமே இல்லை என்று கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக ஆட்சிக்கட்டிலில் அமருவார். அதற்கு யாருடைய உதவியும் தேவை இல்லை என்று கூறியிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.