நீட் என்ற பாம்பிற்கு பால் வார்த்தது தி.மு.க.தான்! அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்டாலினுக்கு சுளீர் கேள்வி!

கொரோனா தொற்றுக்குப் பிறகு தொடங்கப்பட்ட சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தில் நீட் பிரச்னையை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கிளப்பினார். நீட் தேர்வை தடுத்தும் நிறுத்த முடியவில்லை என்று ஆளும் கட்சியை நோக்கி குற்றச்சாட்டுகளை வீசினார்.


தி.மு.க. காலத்தில்தான் நீட் தேர்வுக்கு சட்டம் நிறைவேறியது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றம் சாட்டிய நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரும் தி.மு.க.வை கடுமையாக சாடினார்.

நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழைவதற்கு அனுமதித்தது தி.மு.க.தான். நீட் என்ற பாம்பிற்கு பால் வார்த்தது யார்? பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் பழக்கம் தி.மு.க.விற்கு கைவந்த கலை என்று கூறினார்.

மேலும், நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஆபத்து என்பது உறுதியானதும், நீதிமன்றத்தை நாடியது அ.தி.மு.க.தான். ஒட்டு மொத்த மாணவர்களின் நலனுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியது அதிமுக அரசு என்று கூறியிருக்கிறார்.