தலைமைச் செயலகத்தில் அமைச்சருக்கு திடீர் ஹார்ட் அட்டாக்! மருத்துவமனையில் கவலைக்கிடம்!

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.


கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருப்பவர் உடுமலை ராதாகிருஷ்ணன். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் இருந்த படி பணிகளை அவர் கவனித்து வந்தார். திடீரென நெஞ்சு வலிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

சாதாரணமான நெஞ்சுவலி என நினைத்த பணியாளர்கள் தண்ணீர் எடுத்து வர ஓடியுள்ளனர். அதற்குள் நெஞ்சுவலியை பொறுக்க முடியாமல் உடுமலை ராதாகிருஷ்ணன் அப்படியே சாய்ந்துள்ளார்.

இதனால் பதறிப்போன அலுவலக பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் எப்போதும நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த செவிலியர்கள் உடனடியாக அமைச்சரை மருத்தவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர்.

மின்னல்வேகத்தில் செயல்பட்ட அவர்கள் உடுமலை ராதாகிருஷ்ணனை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து வென்டிலேட்டர் சப்போர்ட்டில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து மருத்துவர்கள் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதைக்கு பயப்படும் படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.