டெல்லியில் பா.ஜ.க. அமைச்சர்களை சுற்றிச்சுற்றி வந்த அமைச்சர் தங்கமணி. எல்லாமே பன்னீருக்கான செக்?

தமிழ் நாட்டில் இருந்து தங்கமணி மட்டுமே டெல்லி தூதுவர் போன்று போய்வந்துகொண்டு இருந்தார்.


அவரை அடுத்து வேலுமணியும், விஜயபாஸ்கரும் சென்று வந்தனர். ஆனாலும், பா.ஜ.க.வில் பன்னீருக்குத்தான் அதிக ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, தங்கமணி வசம் டெல்லி பொறுப்பை ஒப்படைத்துவிட்டாராம். அத்தனை அமைச்சர்களையும் கைக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்தாராம்.

அதன்படி தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன், வைத்திலிங்கம், முத்துக்கருப்பன், விஜயகுமார் ,எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், விஜிலா சத்தியானந்த், முகமது ஜான், சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் மத்திய ஜலசக்தி அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை இன்று சந்தித்து, தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவில் முக்கிய திருத்தங்கள் செய்வது ஆலோசனைக் கடிதத்தினை வழங்கினார்கள் 

அடுத்தபடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய ஜலசக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரை அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து, தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவில் முக்கிய திருத்தங்கள் செய்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தினை வழங்கினார்கள் 

இதுதவிர மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடாவை புது டில்லி சாஸ்த்ரி பவனில் .தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்து கூடுதல் யூரியா உரங்கள் ஒதுக்கீடு கோரிய முதலமைச்சர் கடிதத்தினை வழங்கினார்கள் 

பின்னர் மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் .சிங் அவர்களை, தங்கமணி சந்தித்து தமிழக மின் திட்டங்கள் குறித்துப் பேசினார். மத்திய சுற்றுச் சூழல்,வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாறுதல் துறை அமைச்சர் .பிரகாஷ் ஜவடேகர் அவர்களையும் தங்கமணி சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டின் புதிய மின் திட்டங்களுக்கு விரைவாக சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தங்கமணி சந்தித்துப்பேசினார். பின்னர், மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் ப்ரஹலாத் ஜோஷி அவர்களை, அவரது பாராளுமன்ற வளாக அலுவலகத்தில் வைத்து சந்தித்து தமிழக அனல் மின் திட்டங்களுக்கு கூடுதல் நிலக்கரி ஒதுக்கீடு செய்திட கோரிக்கை வைத்தார்.

இப்படியெல்லாம் செஞ்சுட்டா பன்னீருக்கு முக்கியத்துவம் குறைஞ்சிடுமா..?