கொடுக்கும் குணம் படைத்தவர் எடப்பாடி! கெடுக்கும் குணம் படைத்தவர் ஸ்டாலின்! அமைச்சரின் ஷார்ப் அட்டாக்!

அருப்புக்கோட்டையில் அமைச்சர ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர் சந்தித்தார்.


அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: 8 வழி சாலை தொடர்பாக மக்கள் மற்றும் கூட்டணி கட்சி எடுக்கும் முடிவு தான் எடப்பாடி அரசின் முடிவு. TTV தினகரன் டெண்டர் நியாபகத்திலேயே இருக்கிறார். கொடுக்கும் குணம் படைத்தவர் எடப்பாடி பழனிசாமி கெடுக்கும் குணம் படைத்தவர் ஸ்டாலின்.

திமுக தமிழர்களின் மானம் காப்போம் என்று விளம்பரம் செய்து வருகிறது. ஆனால் இலங்கையில் தமிழர்கள் பட்டினியாலும் ஆடை இழந்தும் இறந்தவிட்டனர். எனவே தமிழர்களின் மானம் காக்க தவறியது திமுக தான். 

திமுக தமிழ் தமிழ் என்று கூறி தமிழக மக்களை சிந்திக்க விடாமல் தடுத்து விட்டது. ஆனால் திமுகவினர்  குடும்பத்தினர் பல மொழிகள் படித்துவிட்டனர். தமிழ் மொழி தமிழ் மொழி என்று தமிழை வளர்க்காமல் கனிமொழியை வளர்த்துள்ளார்கள். தமிழ் மொழியை விற்று பிழைப்பு நடத்தியவர்கள் தான் திமுகவினர்

ஸ்டாலினுக்கு எடப்பாடியை பற்றி பேச அருகதை இல்லை. திருட்டு ரயிலில் வந்தவர்களுக்கு எடப்பாடி பற்றி பேச யோக்கியதை இல்லை. திருவாரூரில் இருந்து சென்னைக்கு எட்டு ரூபாய் டிக்கெட் கூட எடுக்க முடியாமல் திருட்டு ரயிலில் வந்தவர்கள் கலைஞர் குடும்பத்தினர்.

ஸ்டாலினுக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி வந்தது? செல்விக்கு பெங்களூரில் ஏழுபங்களா பண்ணை வீடு உள்ளது. ஸ்டாலினுக்கு கோபாலபுரத்தில் 52 வீடுகள் வந்தது எப்படி? அம்மா இறந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் திமுக தலைவர் கருணாநிதி இரண்டு வருடம் வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். இதற்கு எடப்பாடி அரசு கண்டிப்பாக விசாரணை கமிஷன் வைக்கும்.  டிடிவி தினகரன் இல்லை அவரது டாடி வந்தாலும் எடப்பாடி அரசை ஒன்றும் செய்ய முடியாது   ஸ்டாலின் மிகவும் ராசியானவர் என்றைக்கு ராகுல் காந்தி பிரதமர் என்று கூறினாரோ அன்றே காங்கிரஸ் விளங்காமல் போய்விட்டது.