அமைச்சர் செல்லூர் ராஜுக்கே கொரோனா வந்திடுச்சாம்..! அதிர்ச்சியில் அ.தி.மு.க. அமைச்சர்கள் ...

ஏற்கனவே அ.தி.மு.க. அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துவரும் நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜுக்கும் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


வாழும் விஞ்ஞானியாக கருதப்படும் அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜூக்கும் கொரோனாவா என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் வட்டாரம் அலறிப்போய் நிற்கிறது. அத்தனை பேரும் தினமும் கொரோனா டெஸ்ட் செய்துவருகின்றனர்.

அமைச்சர் தங்கமணியின் மனைவி, மகன், மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, செல்லூர் ராஜூவின் மனைவிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது. இப்போது இவரும் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அடுத்து என்ன..? ஸ்டாலின் கூப்பிட்டு பேசுவாரு, ஜாக்கிரதையா இருங்க.