அந்த விஷயத்துக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வரமாட்டார்! சட்டப்பேரவையை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஜெயக்குமார்!

சட்டப்பேரவையில் பேசிய போது ஸ்டாலின் அந்த விஷயத்திற்கு சரிப்படமாட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதால் சிரிப்பலை எழுந்தது.


சட்டப்பேரவையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் மீது திமுக எம்எல்ஏ பொன்முடி பேசினார். அப்போது திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் தடுக்கப்படும் என்றார்.

மேலும் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் பொன்முடி பேசினார். அப்போது திடிரென குறுக்கிட்ட ஜெயக்குமார் அந்த விசயத்துக்கு அவர் சரிப்பட்டு வரமமாட்டார் என்று கூறினார்.

இதனால் சட்டப்பேரவையில் பயங்கர சிரிப்பொலி எழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைநத் பொன்முடி, நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளோம். இடைத்தேர்தலிலும் 13 தொகுதிகளை வென்றோம்.

எனவே வரும் தேர்தலில் வென்று முதலமைச்சர் பதவியில் ஸ்டாலின் அமர்வார் என்றார். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார். சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக தான் வெற்றி பெறும் என்று விவாதத்தை முடித்தார்.