பாமக, தேமுதிகவுடன் கூட்டணியை முறிக்கிறது அதிமுக!

சென்னை: வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக உடன், அதிமுக கூட்டணி வைக்குமா, என்பது பற்றிய கேள்விக்கு ஜெயக்குமார் மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.


மக்களவைத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் காரணமாக, அதிமுக கூட்டணி ஓரிடத்திற்கு மேல் எங்கேயும் வெற்றி பெறவில்லை. இதனால், பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்ட, என்பது போல இரு கட்சித் தலைவர்களின் நடவடிக்கையும் உள்ளது. 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது, வர உள்ள, உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக, பாமக, பாஜகவுடனான கூட்டணி தொடருமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, நேரடியாக பதில் சொல்ல மறுத்த ஜெயக்குமார், கட்சி மேலிடம்தான் இது பற்றி முடிவு செய்யும், நான் எதுவும் சொல்ல முடியாது என்று குறிப்பிட்டார். 

கூட்டணி தொடரும் அல்லது இல்லை என்று நேரடியாகச் சொல்லாமல் ஜெயக்குமார் இப்படி மறைமுகமாகப் பேசியுள்ளது அரசியல் விமர்சகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் போதிய பலத்தை பெற்றுவிட்டதால், இனி பாஜக தயவு தேவையில்லை என்ற முடிவுக்கு, ஈபிஎஸ், ஓபிஎஸ் வந்துவிட்டதாகவும், அதன் வெளிப்பாடாகவே ஜெயக்குமார் இப்படி பேசியுள்ளார் எனவும்