கீழ்த்தரமான அரசியல் வேண்டாம்... தே.மு.தி.க.வுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை.

அ.தி.மு.க. கூட்டணியில் பலம் வாய்ந்த பா.ம.க.வுக்கும் அடுத்ததாக தேசிய அளவிலான பா.ஜ.க. கட்சிக்கும் போதிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கட்சிகளுக்கு இணையாக 23 தொகுதிகள் கேட்ட காரணத்தால், தே.மு.தி.க. பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்தது.


இந்த நிலையில், இன்று மாவட்டச் செயலாளர் கூட்டத்தைக் கூட்டிய தே.மு.தி.க.வினர்,காட்டமாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படததால், கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக இன்று விலகுவதாக அறிவித்துவிட்டனர்.

இதையடுத்து பேசிய சுதிஷ், ‘‘போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு வருகிறார். இனிமேல் அ.தி.மு.க. எங்கேயும் டெபாசிட் பெறாது’’ என்று கடுமையாக குற்றம் சாட்டினார். 

அதேபோன்று, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும் , ‘தலையே போனாலும் தே.மு.தி.க. தன்மானத்தை இழக்காது. அ.தி.மு.க. மண்ணைக் கவ்வும்’’ என்று ஆவேசப்பட்டுள்ளார்.

இந்த விமர்சனம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது :- தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல், கூட்டணியில் இருந்து விலகியது. அதிருப்தியிருந்தால், அரசியல் நாகரீக கருத்துக்களை கூறலாம். ஆனால், அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசுவதை ஏற்க முடியாது. எனக்கும் தேமுதிகவை வாங்கு வாங்கு என்று வாங்குவேன். வெளுத்து வாங்கத் தெரியும்.

அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் எனக் கூறும் சுதீஷ் என்ன ஜோதிடரா..? 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிதான் வெல்லும். தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்ததே அதிமுகதான். தேமுதிக வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இல்லை என்றால் அதிமுக பதிலடி கொடுக்கும். கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிகவிற்கு தான் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது

தேமுதிகவின் செல்வாக்கு, வாக்கு வங்கி அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்க முன்வந்தோம். தேமுதிகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை கேட்டுப்பெறுவதுதான் புத்திசாலித்தனம். தேமுதிக அப்படி செயல்படவில்லை என்றால் என்ன செய்ய முடியும்..?அதிமுக குறித்து விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசுவதை பொருட்படுத்தவில்லை.

கூட்டணியில் இருந்த போதே சுதீஷ் பேசிய பேச்சுக்களை பொறுத்துக் கொண்டோம். தேமுதிக கூட்டணிக்குவரவில்லை என்று முடிவெடுத்தபிறகு நாங்கள் என்ன செய்ய முடியும். கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க. பாஜகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்கீடு செய்தோம், எனத் தெரிவித்தார்.

அப்படி போடுங்க சார்.