நான், என் மனைவி, அவள் குரூப் செக்ஸ் செய்தோம்! உலகப் பெரும் பணக்காரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கோலா லம்பூர்: இறந்து போன டீன் ஏஜ் மாடலுடன் குரூப் செக்ஸ்தான் செய்தோம், அவளை நாங்கள் கொல்லவில்லை என்று, மில்லியனர் அலெக்ஸ் ஜான்சன் விளக்கம் அளித்துள்ளார்.


பிட்காயின் மில்லியனர் அலெக்ஸ் மற்றும் அவரது லுனா ஜான்சன் ஆகியோர் கடந்த 18 மாதங்களாக, தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் தற்போது மெயில்ஆன்லைன் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில், டச்சு மாடல் இவானா ஸ்மித் கொலையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், அன்றைய இரவில் அவருடன் குரூப் செக்ஸ்தான் செய்தோம் என்றும் கூறியுள்ளனர். 

18 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர்கள் கைது செய்யப்பட்டு 2 மாத சிறைக்குப் பின்னர் தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எந்த குற்றமும் செய்யவில்லை என, அவர்கள் பற்றி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்பிறகே, அவர்கள் மகிழ்ச்சியாக, மெயில்ஆன்லைன் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர்.

அதில், சினிமா படங்களில் வருவதுபோல, ஒரு திரில்லிங் முறையில் செக்ஸ் வேட்டை செய்ததாகவும், அதன்பின்னர் என்ன நடந்தது என்று தங்களுக்குத் தெரியாது, என அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். அவர்களின் அபார்ட்மெண்டில் இருந்து, 12 மாடிகள் கீழே உள்ள பால்கனியில் இருந்து மாடல் அழகியின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அவரை பிரேத பரிசோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட கோக்கைன், ஆல்கஹால் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியிருந்ததும் தெரியவந்தது. ஆனால், அவருக்கு போதை மருந்து எதுவும் தாங்கள் தரவில்லை என, ஜான்சன் தம்பதியினர் மறுத்துள்ளனர். எதிர்பாராவிதமாக அவர் பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்திருக்கலாம் என்று குறிப்பிடும் ஜான்சன் தம்பதி, குரூப் செக்ஸ் செய்த விவரம் வெளியில் தெரியக்கூடாது என்ற கூச்ச சுபாவம் காரணமாகவே, இவ்வளவு நாட்களாக, நாடு விட்டு நாடு என தலைமறைவாக சுற்றி திரிந்தோம் என்றும் தெரிவித்துள்ளனர்.