சக ஊழியரின் சிறு வயது மகளை பலாத்காரம் செய்த ராணுவ ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணுவ தலைமையக அவலம்! ஊழியரின் மகளுடன் செக்ஸ் வல்லுறவு கொண்ட உயர் அதிகாரி!
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டை பகுதியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு தலைமையகம் அமைந்துள்ளது.
இதில் குரூப் டி நிலையில் பணிபுரியும் உயர் அதிகாரி தனது சக ஊழியரின் சிறு வயது மகளை பலாத்காரம் செய்திருக்கிறார். சம்பந்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நிலையில், சிறுமி மட்டும் தங்களது ராணுவ குடியிருப்பில் தனியாக இருந்தபோது, இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்த போலீசார் குறிப்பிட்ட நபரை கைது செய்தனர். அந்த நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜூன் 24ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் அனுமதி பெற்றுள்ளனர்.
வில்லியம் கோட்டையின் உள்ளே ஓல்ட் பாபு லேன் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.