46 வயது நடிகரிடம் மயங்கியது எப்படி 20 வயது இளம் பெண் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!

மிலிண்ட் சோமர் மற்றும் அங்கிதா நோன்வர் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  காரணம் இவர்களுக்கு இடையில் உள்ள வயது வித்தியாசம் தான். பிரபல நடிகர், மாடல் மற்றும் தயாரிப்பாளரான மிலிண்ட் சோமருக்கும் அவரது மனைவி அங்கிதாவிற்கும் சுமார் 26 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளது.  இது மிலிண்ட் ரசிர்கர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இவர்களது மலரும் நினைவுகளை அங்கிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். "நாங்கள் இருவரும் சந்தித்து சுமார் 6 ஆண்டுகள் ஆன நிலையிலும்,  மிலிண்டை நேற்றுப் பார்த்தது போன்று தான் உள்ளது.  நான் என் கணவரை சந்தித்த போது எனக்கு 20 வயது, அப்போது நான் ஏர் ஏசியா விமானத்தில் பணி புரிய ஆரம்பித்தேன்.  

அந்த சமயத்தில் காதலர் திடிரென்று விபத்து ஒன்றில் சிக்கி உயிர் இழந்தார்.  என்னால் தாங்க முடியாத பேர் இழப்பாக மாறியது. அதன் பின் இரண்டு மாதங்களுக்கு பின்பு எனக்கு சென்னையில் வேலை கிடைத்தது. வேலை நிமித்தமாக நானும் எண்னுடன் பணி புரியும் சிலருடன் இணைந்து ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தோம்.

அதிஷ்ட வசமாக  மிலிண்ட் சோமரும் அதே ஹோட்டலில் தங்கியிருந்தார். சொல்லப்போனால் நான் மிலிண்டின் மிகப்பெரிய ரசிகை. அவரை அந்த ஹோட்டலில் பார்த்ததும் என்னால் என் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலவில்லை.  அவரிடம் சென்று பேச வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்தேன். ஆனால் அவர் மிகவும் பிசியாக வேலை செய்து கொண்டிருந்தார்.

பின்னர் மீண்டும் சில நாட்கள் கழித்து அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன்.  நான் அவரையே வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்தேன். அவரும் என்னையே பார்த்தார். அதை பார்த்த என் நண்பர்கள் என்னை அவரிடம் போய் பேசுமாறு கூறினார்.  நானும் அவரிடம் சென்று இருவரும் சேர்ந்து நடனம் ஆடலாமா என்று கேட்டேன், அவர் அதை ஏற்று கொண்டு என்னுடன் ஆடியது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

நாட்கள் செல்ல செல்ல நங்கள் இருவரும் எங்கள் மொபைல் எங்களை பரிமாறி கொண்டோம்.  மனம் விட்டுப்பேச ஆரம்பிதோம். அவர் மீது இருந்து அன்பு காதலாக மாறியது.  மிலிண்ட் சோமரிடம் என்னுடைய முன்னாள் காதலரை பற்றி கூறினேன். அப்போது அவர் உன்னை நான் முழுமையாக ஏற்று கொள்ளும் போது உன்னுடைய கடந்த கால வாழ்க்கையையும் சேர்த்து ஏற்று கொண்டேன்.

உன்னுடைய கடந்த வாழ்க்கையை பற்றி நீ கவலை கொள்ள வேண்டாம், நான் இருக்கிறேன் என்று கூறினார். இந்த வார்த்தைகள் மிலிண்ட் யார் என்பதை எனக்கு உணர்த்தியது. அவர் எனக்கானவர் என்பதை உறுதிப்படுத்தியது. இதற்கு பின் இருவரும் 5 வருடங்களாக திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த ஆண்டு தான் இருவரும் ஸ்பெயினில் திருமணம் செய்து கொண்டனர்.  

இவர்களின் வயது வித்தியாசம் அங்கிதாவின் பெற்றோரிற்கு த்ரிப்திகரமாக இல்லையாம்.  ஆனால் தற்போது இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்த்து மிகவும் சந்தோஷப்படுகின்றனர்.  இருப்பினும் "மிலிண்ட் ரசிகர்கள் பலரும் என்னதான் இருந்தாலும் மகள் வயது பெண்ணுடன் திருமணம் தேவையா?" என கேள்வி எழுப்பியுள்ளனர்