எம்.ஜி.ஆரின் சினிமாவைப் பார்த்துத்தான் லயன் கிங் எடுத்திருக்காங்க - புதுமையான லயன் கிங் திரைப்பட விமர்சனம்

லயன் கிங் 1994ல் கார்டூன் படமாக வந்தபோதே சக்கைபோடு போட்ட படம் 25 வருடங்களுக்குப் பிறகு 3டி அனிமேஷனில் மறுபிறவி எடுத்து வருகிறது.அதன் கதௌ என்ன தெரியுமா?


ஆப்பிரிக்க காட்டை ஆளும் பேரரசான முஃபாசா என்கிற சிங்கத்துக்கு சிம்பா என்று ஒரு மகன்.சிம்பா குட்டியாக இருக்கும்போதே ஸ்கார் என்கிற வில்லன்  சிங்கம் முஃபாசாவை சதி செய்து கொன்று விடுகிறது.அனாதையான சிம்பா எதிரிகளிடமிருந்து தப்பி ஓடி விடுகிறான்.ஓடிப்போன இடத்தில் அவனுக்கு வாய்க்கும் நணபர்களோடு சேர்ந்து பூச்சு புழுக்களை தின்று அப்பாவி சிங்கக் குட்டியாக வளர்கிறான்.

அப்போது அவனது சிறு வயது தோழியான நலா அவனைத் தேடிவந்து சேர்கிறாள்.சோம்பித் திரியும் சிம்பாவுக்கு சண்டையிட கற்றுத்தந்து அவனது தந்தையின் மரணத்துக்கு பழி வாங்குவதும் காட்டில் நல்லாட்சி தருவதும் அவன் கடமை என்று சொல்லி அழைத்துப் போகிறாள்.

சிலபல சாகசங்களுக்குப் பிறகு வில்லன் ஸ்காரைக் கொன்று வன ராஜாவாகிறான் ஸிம்பா!

இது அப்படியே ஒரு எம்ஜிஆர் படத்தின் கதையை தழுவியது என்பது தெரியுமா.

அந்தக் கதையை கேளுங்கள். எம்ஜிஆர் வேங்கைமலை நாட்டின் அரசன். ( முஃபாஸா)அவரை தந்திரமாக கொல்லும் செங்கோடன்( அசோகன் ,ஸ்கார்) அந்த நாட்டு பெண்களை எல்லாம் அடிமைகளாக்குகிறான்.செங்கோட்னால் சிறிய சிறையில் பூட்டி வைக்கப்படும் எம்ஜிஆர் மகன் ( அவரும் எம்ஜிஆர் தான்) கூண்டுக்குள்ளேயே வளர்ந்து மொழிதெரியாத , உலகம் தெரியாத கூனனாக இருக்கிறார்.

பேர் வேங்கையன். அவரை ஜீவா ( ஜெயலலிதா ) என்கிற வீரப்பெண் மீட்டு அவனுக்குப் போர் பயிற்சிகள் அளித்து , தன் தகப்பனைக் கொன்ற செங்கோடனை வென்று வேங்கை மலையை சுதந்திர நாடாக்குகிறாள்.இந்தப் படத்தின் பெயர் 'அடிமைப்பெண்'.படத்தின் தயாரிப்பாளரும் எம்ஜிஆர்தான்.இயக்குநர் கே.சங்கர்.எஸ்.பி பாலசுப்பிரமணியம்' ஆயிரம் நிலவே வா' என்று பாடி அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான்.50 வருடம் முன்பே 2.50 கோடி வசூலித்த படம் இது.

இப்போது சொல்லுங்கள்,ஹாலிவுட் பிரமாண்டமான லைன்கிங்கின் மூலம் எம்ஜிஆர் படம்தானே?.