செல்ஃபி எடுக்க ஒத்துக் கொண்ட வீராங்கனை..! ரசிகரின் கை செய்த தகாத செயல்! பிறகு என்ன நடந்தது தெரியுமா? வைரல் புகைப்படம்!

ரசிகர்களுடன் கால்பந்து வீராங்கனை ஒருவர் செல்ஃபி எடுத்துக் கொண்டபோது, ரசிகர் ஒருவர் ஏடாகூடமாக நடந்துகொண்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மெக்சிகோ நாட்டில் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மெக்சிகன் டைகர்ஸ் சாம்பியன் மற்றும் அமெரிக்க ஹூஸ்டன் டேஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டிக்கு பிறகு, மெக்சிகோ கால்பந்து வீராங்கனை சோபியா ஹூர்டா, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.

அப்போது எல்லை மீறிய ஒரு நபர் அவருடைய மார்பின்மீது கை வைத்துள்ளார். இதற்கு, சோபியா ஹூர்டா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், தனது சக வீராங்கனைகளிடம் இதைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இதன்பேரில், மெக்சிகோ கால்பந்தாட்ட கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் தெரியவில்லை, ஒருவேளை கண்டுபிடித்தால் அந்த நபர் கால்பந்தாட்ட போட்டியை பார்ப்பதற்கு, வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும், எச்சரிக்கப்பட்டுள்ளது.