மலைப்பாம்பை திருடி பாக்கெட்டில் போட்டு அசால்ட்டாக சென்ற பலே ஆசாமி! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

மலைப்பாம்பை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


மிக்சிகனில் உள்ள ராக்வுட் பகுதியில்,  ஐ லவ் மை பெட்ஸ் என்ற கடை உள்ளது. இங்கு, உயிருள்ள விலங்குகளை, வீட்டு வளர்ப்பிற்காக, விற்பனை செய்வது வழக்கம். இதில், பாம்பு, எலி, முயல்,  நாய் உள்ளிட்ட பல வகையான விலங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைக்கு, சமீபத்தில் வந்த ஒரு நபர், அங்கிருந்த மலைப்பாம்பு மற்றும் எலியை திருடிச் சென்றுள்ளார். அவர் எப்படி திருடிச் சென்றார் என்ற காட்சி, சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதன்படி, அந்த நபர் தனது கையிலேயே, 4 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை சுற்றி வளைத்துப் பிடித்தபடி, சாதாரணமாக எடுத்துச் சென்றுள்ளார். இது தவிர, எலி ஒன்றை தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டபடி சர்வசாதாரணமாக திருடிச் சென்றுள்ளார். 

மார்ச் 20ம் தேதி நடந்த இந்த சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட நபரை தேடி வருகின்றனர். பாம்பை கையில் பிடித்தபடியே திருடிச் சென்ற நபரை பார்த்து போலீசாருக்கே வியப்பு ஏற்பட்டுள்ளது.