பெற்ற குழந்தைகளை இரும்பு பெட்டிக்குள் வைத்து பூட்டிய கொடூர தாய்! பிறகு நேர்ந்த விபரீதம்! அதிர வைக்கும் காரணம்!

லக்னோ: இரும்புப் பெட்டியில் வைத்து பூட்டப்பட்ட 2 குழந்தைகளும் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம், படோஹி பகுதியில் கமாரியா என்ற இடத்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு வசிக்கும் பெண் ஒருவருக்கு மனநிலை சரியில்லை எனக்கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு 6 வயதில் ஓரு பெண் குழந்தையும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தன.

இந்நிலையில், இவ்விரு குழந்தைகளையும் அந்த தாய் இரும்புப் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில், அவரது கணவர் மல்லு அன்சாரி வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்திருக்கிறார். குழந்தைகளை காணவில்லை என்று அவர் தேடியுள்ளார்.

நீண்ட நேரம் தேடியும், குழந்தைகள் எங்கே என்று தெரியாமல் குழம்பி போன அவர், ஒருகட்டத்தில் இரும்புப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர்கள் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.