சொந்த தம்பி மகளை கர்ப்பமாக்கிய 65 வயது பெரியப்பா! முந்திரித் தோப்பில் வைத்து சீரழித்த அதிமுக பிரமுகர்! அரியலூர் பரபரப்பு!

சொந்த தம்பியியின் மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம் அரியலூரில் அரங்கேறி உள்ளது. பெரியப்பாவின் இந்த செயலால் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த மகள் தற்போது கர்ப்பம் தரித்துள்ளார்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அகரம் கிராமத்தில் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார் ஒரு பெண். கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார் அந்தப் பெண். 

அந்த கிராமத்தில் வீடுதோறும் பால் விநியோகம் செய்து வந்து தன் மகனை காப்பாற்றி வந்துள்ளார் அந்த பெண். சில சமயம் தனது பெரியப்பாவின் (65 வயது) முந்திரி தோப்புக்குள் சென்று முந்திரி கொட்டைகளை சேகரித்து வந்துள்ளார். கணவரை இழந்து வாழும் அந்தப் பெண்ணை பார்த்த சொந்த பெரியப்பாவுக்கு மகள் என்றும் பாராமல் அடைய வேண்டும் என்று வக்கிர புத்தி தோன்றி உள்ளது. 

இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும் பாராமல் அவரை மிரட்டி முந்திரி தோப்புக்குள்ளேயே பல முறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் தற்போது கர்ப்பம் அடைந்துள்ளார்.

தற்போது இந்த விஷயம் உறவினர்களுக்கு தெரியவர அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தனது கர்ப்பத்திற்கு பெரியப்பதான் காரணம் என அந்த பெண் கூற அவரது பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் செல்வராஜ் மீது புகார் கொடுத்துள்ளனர். இதை அடுத்து செல்வராஜ் மீது வழக்குப் பதிந்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.