இயக்குனர் பாக்கியராஜுக்கு ஆதரவாக களம் இறங்கும் ஆண்கள் பாதுகாப்பு சங்கம்!

சமீபத்தில் கருத்துக்களை பதிவு செய் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ், பெண்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் எந்தத் தவறும் நடக்காது.


ஆனால், இப்போது கணவன் மற்றும் குழந்தைகளை கள்ளக்காதலுக்காக கொலை செய்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. இந்த செய்திகளை பேசுவதுடன் பெண்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பாக்கியராஜ் கூறியது பாராட்ட வேண்டிய விஷயம் என்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கூறியிருக்கிறது.

இந்திய கலாசாரத்தை சிதைக்கும் வகையில், பால்மணம் மாறாத குழந்தைகளின் கொடூர கொலைக்குக் காரணமாகவும் இருக்கும் பெண் கிரிமினல்கள் பற்றி தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு, சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெண்களைக் கண்டு அச்சப்படாமல் துணிந்து கருத்துக்களை சொல்லும் பாக்கியராஜுக்கு துணை நிற்போம் என்று சங்கம் உறுதி கூறியுள்ளது. எப்படியோ, ஆண்களாவது பாக்கியராஜின் பாதுகாப்புக்கு வந்திருக்கிறார்களே என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்.