முதலில் சயீஷா! பிறகு தமன்னா, ஹன்சிகா! இப்போது மெஹ்ரீன்! பிரபல நடிகருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

தெலுங்கு திரை உலகில் தனக்கென்ற ஒரு இடத்தை தக்கவைத்துள்ள நடிகர்கள் வரிசையில் கோபிசந்தும் ஒருவர். இவர் மாச்சோ ஸ்டார் என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார்.


இவர் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மாபெரும் வெற்றி பெற்ற ரவி மற்றும் சதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த ஜெயம் படத்தில் வில்லனாக தனது கதாபாத்திரத்தில் நடிப்பை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்க்கது.   இவரது அடுத்த படம் தமிழ் திரைப்பட இயக்குனர் திருவுடன் தான்.

இயக்குனர் திரு ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் வெளிவந்து பெரிய பிளாக் பஸ்டர் அளித்த " ஏக் டா டைகர்" என்ற படத்தை தெலுங்கு மொழியில்   எடுக்க உள்ளார்.  இந்த படத்திற்கான ஹீரோயின் தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. முதலில் இந்த படத்திற்கு சயீஷா தேர்வாகினார்.  ஆனால் அவருக்கு சமீபத்தில் நடிகர் ஆரியாவுடன் திருமணம் நடைபெற்றதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி கொண்டார்.

அதன் பின்பு ஹன்சிகா அல்லது கேத்தரின் தெரசா ஆகியோரை நடிக்கவைக்கலாம் என்று முடிவு செய்தனர்.  ஆனால் அந்த முயற்சியும் எடுபடாத பட்சத்தில் நடிகை தமன்னாவை நடிக்க வைக்க முடிவு செய்தனர். தற்போது உள்ள திரை உலகின் நிலைக்கேற்ப தமன்னாவும் இந்த பட வாய்ப்பை மறுக்க கடைசியாக  F2  படத்தின் மூலம் பிரபலமான மெஹரீன் கவுர் பிர்சாதா தேர்வு ஆகியுள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் ஹீரோயின்க்கு சம்பளமாக ரூ.2 கோடி வரை தருவதற்கு இப்படத்தின் தயாரிப்பாளர் ஒத்து கொண்டுள்ளார்.