இந்த வார எவிக்சன் மீரா மிதுன் தான்! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்! சற்று முன் வெளியான தகவல்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.


பிக்பாஸ் வீட்டில் வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார். முதல் அளாக பாத்திமா பாபு வெளியேறினார். அடுத்த வாரம் வனிதாவை மக்கள் வெளியேற்றினர். கடந்த வாரம் மோகன் வைத்தியா வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்சன் முடிந்துவிட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே மீரா மிதுனை இந்த வாரம் மக்கள் வெளியேற்றிவிட்டனர். வழக்கமாக எவிக்சன் ஞாயிற்றுக்கிழமை தான் தெரிவிக்கப்படும்.

ஆனால் எவிக்சனுக்கான படப்பிடிப்பு ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமை சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெறும். அதன் படி இந்த வாரமும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே கமல் மீராவை தான் வெளியேற்றியுள்ளார். அவருக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த எவிக்சன் நாளை ஒளிபரப்பாகும்.