மிஸ் தமிழ் அழகிக்கு கேரள தொழில் அதிபரால் நேர்ந்த பரிதாபம்! உதவவும் யாரும் இல்லையாம்!

நடிகை மீரா மிதுனிடம் இருந்து மிஸ் தென்னிந்திய அழகிபட்டம் பறிக்கபடுவதாக சம்மந்தபட்ட அமைப்பு வெளியிட்ட தகவல் பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது.


நடிகையும் மாடல் அழகியுமாக வலம் வந்தவர் மீரா மிதுன்,தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2016ஆம் ஆண்டில் மிஸ் தென் இந்தியா  பட்டத்தை கைப்பற்றிய பின்னர் அவருக்கான பட வாய்ப்புகள் அதிகரித்தது.

இந்த நிலையில் ,மீரா  தாம் தனியாக அழகிப் போட்டி நடத்தவுள்ளதாகவும் அதற்கான  அனுமதி பெற்றபட்டுள்ளது எனவும்  தொழில் போட்டியால் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும் இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த மிஸ் தென் இந்தியா பட்டத்தை பறிப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியுள்ளது. மேலும் மீராவிற்க்கான அந்த பட்டம் செல்லுபடியாகாது என அறிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தை சேர்ந்த மீரா தனியாக அழகிப்போட்டி ஒன்று நடத்த ஆயத்தமாகி வருகிறார்.

ஏற்கனவே அழகிப்போட்டிகளை நடத்தி வரும் அஜித் ரவி என்பவர் தான் இதற்கு இடையூறு செய்து வருகிறார். இது குறித்து தான் கடந்த வாரம் மீரா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தான் மீரா மிதுன் பட்டம் பறிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரவி தெரிவித்துள்ளார்.

இந்த அஜித் ரவி கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர். நாடு முழுவதும் நடைபெறும் அழகிப்போட்டிகளில் இவருக்கு தொடர்பு உண்டு. அவருக்கு போட்டியாக மீரா வளர்வதை விரும்பாமல் தனது செல்வாக்கை அவர் பயன்படுத்தி இப்படி செய்வதாக கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் மீராவுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.