அட நம்ம தெறி பேபியா இது? இப்ப எப்டி இருக்காங்க பாருங்க!

தென் இந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை மீனா.


முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படமாகும். 1990களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.

இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், ஜப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து ஜப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். என் ராசாவின் மனசிலே, எஜமான், அவ்வை சண்முகி, வீரா, முத்து, சிட்டிசன், ரிதம், வில்லன், பொற்காலம், அன்புள்ள ரஜினிகாந்த், சேதுபதி ஐபிஎஸ், பாரதி கண்ணாம்மா, தாய் மாமன், கூலி, செங்கோட்டை, ஆனந்த பூங்காற்றே போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை மீனா. 

இதற்கிடையெ மீனாவின் மகள் நைனிகாவும் அவரது அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளார். பாஸ்கர் ஒரு ராஸ்கல், விஜய் நடித்த தெறி படத்திலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி படு சுட்டியாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளார் நைனிகா.

படம் முடித்து 2 வருடங்களுக்கு பின்னர் தற்போது நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் புதிய போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதிய போட்டோவை பார்க்கும் மீனாவின் ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியப்படுகின்றனர். நைனிகா தற்போது படிப்பில் ஆர்வம் செலுத்துவதாகவும் படிப்பு முடிந்தவுடன் திரையுலகில் கால் பதிப்பார் என்றும் அவரது தாய் மீனா தெரிவித்துள்ளார்.