பெண்களின் அந்த எல்லா பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி இலையே ஆகச்சிறந்த மருந்து!

பெண்கள் ஆரோக்கியத்திற்கு செம்பருத்தி செடியால் பெரும் நன்மைகள் இயற்கையாகவே இருக்கின்றன. செம்பருத்தி வேர், இலை, பூ என எல்லாவற்றிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. எந்தவிதத்தில் உதவுகின்றது என பார்ப்போம்.


உணவில் செம்பருத்திப் பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும்.

செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும். செம்பருத்திப் பூ இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கரு உருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்யாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப் பொடி, கறிவேப்பிலைப் பொடி கலந்து எண்ணெய்யில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.