உல்லாசம் கண்ணை மறைத்தது! இளம் பெண்ணிடம் சொகுசு காரை பறிகொடுத்த மருத்துவ அதிகாரி!

ஏலகிரியில் ஏமாந்த மருத்துவ ஊழியர்!. காரை கடத்திய இளம்பெண்!. உல்லாசம் கண்ணை மறைத்த அவலம்!.


கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தட்டக்கல் பகுதியை சேர்ந்த சக்திவேல் (39) என்பவர் வாணியம்பாடியை சேர்ந்த சீனு என்பவரிடம் உல்லாசம் அனுபவிக்க பெண் ஒன்றை அனுப்பும்படி கேட்டுள்ளார்.

அந்த பெண் பியூட்டிசியன் என்றும் அவர் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து செல்லுமாறும் கூறியுள்ளார்.

ஜோலார்பேட்டையிலிருந்து தனக்கு சொந்தமான டொயாடோ எடியாஸ் காரில்  விபச்சார அழகியான சுவேதா (26) என்பவரை அழைத்துக்கொண்டு  ஏலகிரிமலைக்கு சென்றுள்ளனர். அங்கு தனியாருக்கு சொந்தமான ரெசாட்டில் தனி அறை ஒன்று எடுத்து தங்கி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

பின்னர் குழியலறைக்கு சக்திவேல் சென்றதும் அறையை பூட்டிவிட்டு அவரிடமிருந்த பணத்தை எடுத்துக்கு கொண்டு சக்திவேலின் காரையும் திருடி சென்றுள்ளார். இதனை அறிந்த சக்திவேல் செய்வதறியாது தவித்து 100 எண்ணிற்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். தகவலறிந்ததும் போலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்ற நிலையில் போலிசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பல்வேறு பாதையில் தப்பித்து சென்றுள்ளார். போலிசார் வேலூர் மாவட்டம் முழுவதும் போலிசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.