சென்னையில் அதிசயம்! கர்ப்ப பை இல்லாத பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை!

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்ப பை அகற்றப்பட்டிருந்த பெண்ணை நவீன முறையில் சிகிச்சைக்கு ஆளாக்கி தாய் ஆக்கியுள்ளனர் சென்னையை சேர்ந்த மருத்துவர்கள்.


கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கர்ப்ப பையில் புற்று நோய் இருந்துள்ளது. இதனை கண்டறிந்த மருத்துவர் கர்ப்ப பையை அகற்றியுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு வயது 24.

தற்போது 27 வயதான நிலையில் அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை இதற்காக பரிசோதனை செய்த போது செயற்கை முறை கருத்தரித்தல் நிபுணரான சென்னையை சேர்ந்த கமலா செல்வராஜை கேரள மருத்துவர்கள் பரிந்துரைத்தள்ளனர்.

இதனை அடுத்து அந்த பெண் தனது கணவருடன் சென்னை வந்து கமலா செல்வராஜை சந்தித்துள்ளார். கர்ப்ப பை இல்லாத நிலையில் குழந்தைக்கு வாய்ப்பில்லை என்று முதலில் மருத்துவர்கள் நினைத்துள்ளனர. பின்னர் சோதனை செய்த போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

இளம் பெண்ணுக்கு கர்ப்ப பை அகற்றப்பட்டிருந்தாலும் கூட சினைப்பை செயல்பாட்டில் இருந்துள்ளது. இதனை அறிந்து துள்ளிக் குதித்த கமலா செல்வராஜ், அந்த சினைப்பையில் இருந்து கரு முட்டைகளை எடுப்பது எப்படி என்று ஆராய்ந்துள்ளார்.

கமலா செல்வராஜூக்கு அவரது மகளும் மருத்துவருமான பிரியா உதவியுள்ளார். இதன் மூலம் ஊசி மூலமாக தோள் வழியாகவே அந்த இளம் பெண்ணின் சினைப் பையில் இருந்து கருமுட்டையை எடுத்துள்ளனர். பின்னர் டெஸ்ட்யூப் முறையில் வாடகைத் தாய் அமர்த்தி குழந்தையை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக கர்ப்ப பை இல்லாத ஒரு பெண் அழகிய பெண்குழந்தைக்கு தாயாகியுள்ளார் என்று கூறினார் கமலா செல்வராஜ். மேலும் இது மெடிக்கிள் மிராக்கிள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருப்பை இல்லாத பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது மிகப்பெரிய அதிசயம் என்று பலரும் கொண்டாடி வரும் நிலையில் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்த குழந்தையுடன் கேரளா புறப்பட்டார் அந்த இளம் பெண்.