எம்.பி., தேர்தல்! திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு! வேட்பாளரையும் அறிவித்தார் வைகோ!

நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியை திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார்.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ - மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தனர். அப்போது ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி மதிமுகவுக்கு ஈரோடு தொகுதியை ஒதுக்க ஸ்டாலின் முன்வந்தார்.

இதனை அடுத்து மதிமுகவுக்கு ஈரோடு தொகுதியை ஒதுக்கும் ஒப்பந்தத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ ஈரோடு தொகுதியை மதிமுகவுக்கு திமுக ஒதுக்கியுள்ளதாக கூறினார்.

மேலும் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று வைகோ அறிவித்துள்ளார். கணேசமூர்த்தி கடந்த 2004ம் ஆண்டு மதிமுக சார்பில் ஈரோட்டில் போட்டியிட்ட வென்றனர். 

கணேசமூர்த்தி கடந்த முறையும் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தது குறிப்பிடத்தக்கது.