மாற்றுத் திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர்! வகுப்பறையில் நடந்த பகீர் சம்பவம்! அதிர வைக்கும் காரணம்!

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளி மாணவியை படிக்கவில்லை என்பதற்காக கத்தியால் குத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மயிலாடுதுறை கீழையூர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாஸ்கர். அதே பள்ளியில் பவித்ரா (8) மாற்றுத்திறனாளி குழந்தை 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இக்குழந்தைக்கு கைகளில் விரல்கள் இல்லாத மாற்றுத்திறனாளி.

இந்நிலையில் வீட்டுப் பாடங்களை சரியாக படித்து வராததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் மாற்றுத்திறனாளியான பவித்ராவின் கையில் தான் வைத்திருந்த சிறிய கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து குழந்தையின் கையில் பலமான காயம் ஏற்பட்டது .

இந்நிலையில் உடனே குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மேற்படி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்துள்ளனர்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளி ஆசிரியரை கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்கு போட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.