ஆதரவை வாபஸ் வாங்குகிறார் மாயாவதி! ம.பி., காங்., அரசு கவிழ்கிறது!

மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கு அளித்திருக்கும் ஆதரவை தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.


மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மக்களவை தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட லோகேந்தர் சிங் ராஜ்புத் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். இதனால் கோபம் அடைந்த மாயாவதி ராஜ்புத்தை மிரட்டி காங்கிரஸ் தனது கட்சியில் சேர்த்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் அரசு எந்திரத்தை பாஜகவை போல காங்கிரஸ் கட்சியும் தவறாக பயன்படுத்துவதாக மாயாவதி தெரிவித்துள்ளார். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் கமல் நாத் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ்  பெறுவது குறித்து பரிசீலிக்க உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார் மாயாவதி.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 231 தொகுதிகளில் 113 எம்எல்ஏக்கள் மட்டு மே காங்கிரசுக்கு உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவையான மேலும் 3 எம்எல்ஏக்களில் சுயேட்சை மற்றும் மாயாவதி கட்சி ஆதரவால் அரசு நீடித்து வருகிறது. 2 எம்எல்ஏக்களை கொண்டு மாயாவதி ஆதரவை திரும்ப பெற்றால் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்ந்துவிடும். இதனால் மத்திய பிரதேசத்தில் பரபரப்பு நிலவுகிறது.