மே 29 கொரோனாவுக்கு கடைசி நாள் குறிக்கிறான், அதிசய சிறுவன் அபிக்கியா ஆனந்த். இவன் சொல்வதைத்தான் கேட்கிறதா இந்திய அரசு.

திடீரென படுபாப்புலர் சிறுவனாகிவிட்டான் 14 வயதான அபிக்கியா ஆனந்த் என்ற இந்தியச் சிறுவன். .


அவனுடைய யூடியூப் சேனலில் 22 ஆகஸ்ட் 2019ல் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுச் சொன்னான். அதாவது பூவுலகம் நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை ஒரு கடினமான சூழ்நிலைக்குத் தள்ளப்படும் என்றும், இந்த 6 மாத காலத்தில் உலகளாவிய வைரஸ் ஒன்று பரவி உலகையே பீதியில் ஆழ்த்தும் என்று சொன்னான்

திடீர் பாப்புலரான இவனுடைய திறமையால் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் விலையின் ஏற்ற, இறக்கங்கள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று கூட சொல்கிறானாம்.

இந்த நோய்க்கு எதிராக நாம் தனிமைப்பட்டு இருக்கத்தான் வேண்டும். மார்ச் 31 முதல் மே 31 வரை இதைப் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும், வேறு வழி கிடையாது என்று சொல்லும் சிறுவன், இதற்கு ஒரு தீர்வும் சொல்கிறான்.

ஆம், கோள்களின் சஞ்சாரப்படி மே 29 அன்று இந்தச் செயின் அறுபடும். அதற்குள் இந்த வைரசுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் நன்கு வேலை செய்து இதன் தாக்கம் குறையத் தொடங்கும். அதற்குப்பின் பொருளாதார தேக்க நிலை நவம்பர் 2021க்குள் சரியாகி இந்தியா உலகிற்கே முன்னாடியாகத் திகழும் என்கிறான்.

இவன் என்ன சொல்கிறான் என்பதைத்தான் பா.ஜ.க. தலைவர்கள் நிறைய பேர் அப்படியே நம்புகிறார்களாம். பேசாமல், இவனையே நாம் தலைவனாக தேர்வு செய்திருக்கலாம்.