வசமாக சிக்கியிருக்கிறார் மேத்யூ சாமுவேல்..! முதல்வர் பழனிசாமிக்கு எதிராக அவர் போட்ட வழக்கு தள்ளுபடி.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் தமிழக முதல்வரை தொடர்புபடுத்தி, தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஒரு பேட்டி கொடுத்தார்.


இது, திட்டமிட்டு தன் மீது கிளப்பப்படும் அவதூறு என்று மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி 1 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சாமுவேல் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த வழக்கை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை என்று கூறி, மேத்யூ சாமுவேலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், முதல்வரின் மனுவுக்குப் பதில் அளிக்குமாறு மேத்யூ சாமுவேலுக்கு உத்தரவும் போட்டார் இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஆக, வசமாக சிக்கியிருக்கிறார் மேத்யூ சாமுவேல்.