பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டு குழந்தையும் பெறச் செய்து ஏமாற்றியதாக மார்க்சிஸ்ட் கேரள மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினாயை மும்பை போலீசார் தேடிவருகின்றனர்.
நடுத்தர வயது பெண் கர்ப்பமான விவகாரம்! மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் மகன் தலைமறைவு!
பீஹாரைச் சேர்ந்த பெண் மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தான் பினாயை 2008-ஆம் ஆண்டு துபாயில் சந்தித்து பழகியதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பினாய் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னிடம் பாலியல் உறவு கொண்டு வந்ததாக தெரிவித்துள்ள அவர், இதனால் தான் கருவுற்று ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானதாகவும், தனது குழந்தையுடன் மும்பை அந்தேரியி குடியேறியதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டுதான் பினாய்க்கு ஏற்கனவே திருமணமானதும் அவரது குடும்பம் கேரளாவில் இருப்பதும் தெரியவந்ததாகக் கூறியுள்ள அந்தப் பெண் இது குறித்து கேட்டு தான் சண்டையிட்ட போது கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என் பினாய் மிரட்டியதாகவும், அதனைத் தொடர்ந்தே தான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் பினாய் மும்பையில் இருந்து தலைமறைவானதை அடுத்து மும்பை போலீசார் கேரளா விரைந்தனர். ஆனால் கேரளாவிலும் அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் மும்பை போலீசாருக்கு கேரள போலீசார் ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கட்சியாக இருக்கும் வரை கேரள போலீசார் ஒத்துழைக்கமாட்டார்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து பினாயை பிடிக்க மும்பை போலீசார் வேறு வழிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.