கழுத்தில் கத்தி குத்து! ரத்த வெள்ளத்தில் அலறிய எம்எல்ஏ! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு!

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ- தன்வீர் சைடேவை கத்தியால் கழுத்தில் குத்திய மர்ம நபர் தப்பிச்சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.


கர்நாடகவின், கர்நாடகாவில் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசாங்கத்தில் தன்வீர் அமைச்சராக இருந்தவர். தற்போது மைசூருவில் உள்ள நரசிம்மராஜா தொகுதியின் எம்.எல்.ஏ தன்வீர் சைடே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார். 

எம்.எல்.ஏ தன்வீர் சைடே நேற்று இரவு காங்கிரஸ் மைசூருவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார். அப்போது, யாரும் எதிர்பாக்காத நேரத்தில், மர்ம நபர் ஒருவன் கத்தியால் தன்வீரின் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதனையடுத்து, எம்.எல்.ஏ தன்வீர் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் மைசூருவில் உள்ள கொலம்பிய ஆசியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் தன்வீர்க்கு அறுவை சிகிச்சைக்கு செய்தனர். தற்போது எம்.எல்.ஏவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில், எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள், கத்தியால் குத்தி தப்பிக்க முயன்ற நபரை பிடித்த சரமாரியாக தாக்கிய அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்து புகாரும் கொடுத்துள்ளனர்.

பின்னர், காவல் துறையினர் புகாரின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்டவர் 20 வயதான ஃபர்ஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், விசாரணை நடந்து வரும் நிலையில் தாக்குதலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. எனவே, இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.