காதலன் கொலை! காதலிக்கு அரிவாள் வெட்டு! துடித்துக் கொண்டிருந்த பெண்ணுடன் உடலுறவு! காமுகனுக்கு தரமான தண்டனை!

தேனி மாவட்டம் சுருளியில் இளம்பெண்ணை வெட்டி சாய்த்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.


எழில் முதல்வன் மற்றும் கஸ்தூரி ஆகிய இருவரும் கல்லூரியில் படிப்பவர்கள். இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 

காதலர்கள் இருவரும் 2011ஆம் ஆண்டில் சுருளி அருவி வனப்பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற கருநாக்கம் முத்தன் பட்டியை சேர்ந்த திவாகர் என்ற கட்ட வெள்ளை என்பவன், காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்துள்ளான். பின்னர் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளான்.

காதலன் எழில் அங்கேயே துடிதுடித்து உயிர் இறந்துவிடவே' கஸ்தூரி மட்டும் உயிருக்கு போராடியுள்ளார். அப்போது ஈவு இரக்கம் பாராமல் திவாகர் என்பவன் கஸ்தூரியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். காதலர்கள் இருவரும் மர்மமான முறையில் உயிர் இறந்து கிடந்தது குறித்து முதலில் போலீசார் விசாரித்து வந்தனர்.

பின்னர் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதை விசாரித்த சிபிசிஐடி போலீசார், திவாகரை கைது செய்தனர். எட்டு வருடங்களாக இந்த வழக்கை விசாரித்து வந்த தேனி மாவட்ட நீதிமன்றம், ஏழு வருட கடுங்காவல் தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை' மற்றும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு தேனி நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, கொடூரன் திவாகருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.