குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இத்தனை விவகாரம் நடந்திருச்சா? பல்டி அடிக்கும் அமித்ஷா, கப்சிப் மோடி!

இஸ்லாமியர்களுக்கு எதிராக முதல் தாக்குதல் காஷ்மீர். அடுத்து முத்தலாக்.


பின்னர் அயோத்தி தீர்ப்பு. இப்படி தொடர்ந்து அடித்தபோதும் இஸ்லாமியர்கள் அமைதியாகத்தான் இருந்தனர். அந்த தைரியமோ என்னவோ, சூட்டோடு சூட்டாக குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகம் செய்து நிறைவேற்றி விட்டார்.

இந்தியாவில் ஆங்காங்கே போராட்டம் நடந்துவரும் நிலையில், வெளிநாடுகளும் இந்தியாவைக் கண்டு அதிர்ந்து நிற்பதுதான் அதிர்ச்சி தகவல். ஆம், ஜப்பானிய பிரதமர் அபே இந்தியாவின் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டா. அதனால், அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற இருந்த மோடியுடன் ஜப்பான் பிரதமர் சந்திப்பு நடக்காமலே போய்விட்டது.

அதேபோன்று, பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. "இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சகோதரத்துவம் நாடு ஆனால் தற்போதைய நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது" என்று பங்களாதேஷ் வெளியுறவுத் துறை கவலை தெரிவித்து இருக்கிறார். 

இவற்றை விட, ஐ.நா. மனித உரிமை ஆணையம், ‘குடியுரிமை சட்ட மசோதா இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது’ என்று கூறியுள்ளது. அதேபோன்று, உலக நீதிபதிகள் கூட்டமைப்புயும், இந்த சட்டம் மசோதா பல்வேறுவிதமான குற்றங்களுக்கும் ஆதாரமாக அமையும் எனவும் அறிவித்துள்ளது.

இப்படி இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மசோதாவுக்கு எதிர்ப்பு வரும் என்று அமித்ஷா நினைக்கவே இல்லை. அதனால், வேறுவழியின்றி, தேவை என்றால் இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்துகொள்ளலாம் என்று இறங்கி வந்திருக்கிறார். இன்னமும் மோடி மட்டும் கப்சிப் என்று அமைதியாக இருக்கிறார்.

அதுசரி, அவர் என்னத்தைத்தான் வாயைத் திறந்து சொல்லியிருக்கிறார்.