முகத்தை அழகாக வைத்திருக்கவும், அழுக்கைப் போக்குவதற்கும் எந்தப் பக்கவிளைவும் இல்லாத அற்புத சிகிச்சை ஆவி பிடிப்பதுதான். சருமத்தில் உள்ள துளைகள் விரிவடைந்து அழுக்குகள் மற்றும் கிருமிகள் வெளியேறிவிடுவதால் முகம் பளீச்சென மாறிவிடும்.
செலவே இல்லாத ஆவி சிகிச்சையில் இத்தனை நன்மைகளா?
* தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் இருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி போர்வையை மூடிக்கொண்டு குறைந்தது ஐந்து நிமிடங்களாவது இருக்க வேண்டும். கூடுதலாக எவ்வளவு நேரம் இருந்தாலும் நல்லதுதான்.
* ஆவி பிடித்துமுடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கவேண்டும். அப்போதுதான் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாமே அகற்றப்படும்.
* இதனால் கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் அகலுவதுடன் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் குறைகிறது.
ஆவி பிடிக்கும்போது முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், மூச்சுப் பிரச்னை இருந்தாலும் சரியாகிறது. மேலும் சருமம் முதுமை அடையாமல் தடுக்கப்படுவதால் என்றும் இளமையாக இருக்க முடியும்.