வாய் விட்டு சிரித்தால் வரும் நன்மைகள் ஆயிரம்! எப்படி?

மனிதன் பிறந்த குழந்தையாக இருக்கும் சமயத்தில் அதிகமாக சிரிக்கிறான். வயதாக ஆக சிரிப்பு குறைந்துவிடுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது.


 சிரிப்பதால் நம்முடைய மூளையில் உள்ள எண்டோர்பின் என்னும் ஹார்மோன் சுரக்கிறது இதனால் நம்முடைய உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். நீண்ட நேரம் நாம் சிரிப்பதன் மூலம் நமது உடலில் உள்ள கொட்ட கலோரிகளை குறைக்கலாம். நாம் அதிகமாக சிரிப்பதன்மூலம், நமது உடலில் அதிக ஜீரண அமிலம் சுரந்து நமது உணவுகளை ஜீரணிக்கும். சிரிப்பதன் மூலம்,நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள முடியும். சிரிப்பதன் மூலம் நாம் நமது உடல் எடையை குறைத்து கொள்ள வாய்ப்பு உள்ளது. 

ஒவ்வொருவரும் உயிர்வாழ ஆக்சிஜன் இன்றியமையாதது. நாம் சிரிக்கும்போது அந்த ஆக்சிஜன் போதுமான அளவு உடலுக்கும் செல்கிறது. இதனால் உடலில் பல நன்மைகள் உண்டாகிறது. நன்கு சிரிப்பதால் முகத்தின் தசை நார்கள் விரிந்து முகத்தின் அழகை கூட்டுகிறது. இதயத்துடிப்பை சாதாரண நிலைக்கு கொண்டுவர சிரிப்பு உதவுகிறது. சிரிப்பதால் நம்முடைய ரத்தஓட்டம் அதிகரிக்கும். இதனால் நம்மை மாரடைப்பு மற்றும் இதயநோய்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளமுடியும்.