இதைச் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா மனுஷ்யபுத்திரன்?

உங்களுக்கு வெட்கமே இல்லையா என்று கவிதா பாரதி என்பவர் எழுத்தாளரும் திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரனை நோக்கி எழுப்பிய கேள்விகள் வைரலாகின்றன.


மனுஷ்யபுத்திரன் புதிதாக வரவிருக்கும் தன் பதினொரு கவிதைத் தொகுப்புகளுக்கும் சேர்த்து 1400 விலையிட்டிருக்கிறார்..இந்தத்தொகை மிகவும் குறைவு, இது ஒரு மனிதனின் உழைப்பைச் சுரண்டும் செயல் என்று சொல்லி 1400-க்குப் பதிலாக பத்தாயிரம் ரூபாய் அனுப்பினாராம் ஒருவர். மனுஷ்யபுத்திரனே இதனை பெருமிதத்தோடு பதிவிட்டிருக்கிறார்..

இச்சூழலில் இன்னொரு பதிவும் காணக்கிடைத்தது.. அது தோழர் புலியூர் முருகேசன் அவர்களின் பதிவு உயிர்மை வெளியிட்ட தனது புத்தகங்களுக்கு பணமெதுவும் தரவில்லை.. தனது குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு பணம் வேண்டி கெஞ்சிக்கேட்டபோதும் பலனில்லை என்பதே அப்பதிவின் கண்ணீர்ச் சுருக்கம்..

எளிய எழுத்தாளனின் உழைப்பை வெட்கமில்லாமல் சுரண்டுகிறார் மனுஷ்யபுத்திரன்.. ஆனால் அவரது வாசகர் உரிய விலை கொடுத்துப் புத்தகம் வாங்குவது கவிஞரின் உழைப்பைச் சுரண்டுவதாகும் என்று சுமார் ஏழு மடங்கு அதிகமாகப் பணம் அனுப்புகிறார்.. இவரும் அதை கூச்சமில்லாமல் ஏற்றுக்கொள்கிறார். இதை என்ன சொல்லி முடிப்பதென்று எனக்குத் தெரியவில்லை.. பொருத்தமானதை நீங்களே இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்.

நன்றி: கவிதா பாரதி