மன்மோகன் சிங் பாதுகாப்பு வாபஸ்! ஸ்டாலினையும் கை விடுறாங்களே?

பிரபலங்களின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில் இசட் பிரிவு, இசட் பிளஸ், கமாண்டோ பாதுகாப்பு போன்றவை கொடுக்கப்படுவது வழக்கம்.


அந்த வகையில் பிரதமர், முன்னாள் பிரதமர், ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி ஆகியோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது உண்டு. அப்படித்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட உளவுத் துறை, மன்மோகனுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று சொன்னது. இதனையடுத்து மன்மோகனுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு நீக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

இந்தத் தகவல் தெரியவந்த பிறகும் மன்மோகன் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.  மன்மோகன் மட்டுமின்றி ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்களுக்கும் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள மோடி அரசு திட்டமிட்டு வருகிறதாம்.

இந்த பாதுகாப்பு பந்தாவை குறைத்தால்தான் ஸ்டாலின் அடங்குவார் என்று தமிழக பா.ஜ.க. மேலிடத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளதாம்.  அடப்போங்கப்பா, ஸ்டாலின் அடங்கிப்போய் எவ்வளவோ நாளாச்சுங்க.