பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ஜெயமோகனை விரட்டிய மணிரத்னம்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்ஜிஆர் முதல் , ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா வரை பலர் முயன்றிருக்கிறார்கள்.


மணிரத்தினத்திற்கும் அப்படி ஒரு ஆசை வெகுநாளாக இருக்கிறது.இது வரை இரண்டு முறை முயற்சித்து பின்வாங்கி இருக்கிறார் மணிரத்தினம். இரண்டு முறையும் அவரது ஆஸ்த்தான எழுத்தாளர் புளிச்சமாவு புகழ் ஜெயமோகன் துணையுடந்தான் அந்த முயற்சிகள் நடந்தன.

இப்போது மூன்றாம் முறையாக தீவிரமாக இறங்கிவிட்டார் மணி. ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வனை பாகுபலி போல இரண்டு பாகங்களாக இயக்கப் போகிறார் மணிரத்தினம்.

அமிதாப் பச்சன்,விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,நயன்தாரா என்று மிகப்பெரிய படமாகத் தயாராகப் போகும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயமோகன் இல்லை. அவருக்குப் பதில் 'மேஜிக் லாண்ட்டர்ன்' நாடகக் குழுவுக்காக பொன்னியின் செல்வன் நாவலை வெற்றிகரமாக நாடமாக்கித் தந்த குமரவேலுடன் கைகோர்த்திருக்கிறார் மணி.

வரலாற்று அறிஞரான ராஜமாணிக்கனாரின் பேரனான குமரவேல் ஏற்கனவே நடிகனாக அறிமுகமானவர்தான். ராதா மோகன் இயக்கிய எல்லாப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் குமரவேல்,அபியும் நானும் படத்தில் ரவிசாஸ்த்திரி என்கிற  பிச்சைக்காரனாக நடித்து கவனம் பெற்றவர்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் மணிரத்தினத்தின் படத்தில் சுஜாதா,பாலகுமாரன்,ஜெயமோகன் வரிசையில் அறிமுகமாவதில் உற்சாகமாக இருக்கிறாராம்.