உங்கள் மனது தான் உங்கள் வாழ்வை இயக்குகிறது! எப்டி தெரியுமா?

ஆக்சன் செயல்பாடு என்றால் அங்கு விவேகம் செயல்படுகிறது. ’ரியாக்சன்’ எதிர்ப்பு உணர்ச்சி என்றால் அங்கு விவேகம் செயல்படுவதில்லை.


விருப்பு, வெறுப்புகளை அடிப்படையாக கொண்ட பழக்கமே, இயந்திரத்தனமான உணர்ச்சிகளே செயல்படுகின்றன. விருப்பு, வெறுப்புகள் நம் செயல்பாட்டை நிச்சயிக்கும் போது அவற்றின் ஆதிக்கத்தில் நாம் இயந்திரம் போல் செயல்படுகிறோம். அப்போது நம் செயல்பாட்டின் மீது நமக்கு ஆதிக்கம் இல்லாது போகிறது. நம் செயல்பாட்டின் மீது நமக்கு ஆதிக்கம் இருக்கும்பொழுது நாம் விவேகத்துடன் ஆக்சன் எடுக்கிறோம்.

நாம் விருப்பு, வெறுப்புகளின் ஆதிக்கத்தில் இருக்கும் பொழுது அவற்றின் வசத்தில் நாம் ரியாக்ட் செய்கிறோம்.எப்பொழுதும் ரியாக்ட் செய்து கொண்டிருக்கும் மனம் அமைதியற்றதாக இருக்கிறது. அப்பொழுது எவ்வளவு அனுபவங்கள் பெற்றாலும் நாம் அவற்றிலிருந்து கற்பதில்லை. எண்ணத்துக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாடுகள் மனதில் போராட்டங்களை எழுப்புகின்றன. உணர்ச்சி வேகத்தில் செயல்படுவதும், அதற்குப் பிறகு வருந்துவதும் இப்படியே நம் வாழ்க்கை மாறி மாறி வரும்மூட்களில் அல்லாடி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 

மாறாக இறைவனிடம் பக்தி உள்ள மனம் இறைவனே நமக்கு அனைத்து பலன்களையும் தருகிறான் என்ற நம்பிக்கை கொண்டுள்ளது. அதனால் மனம் ரியாக்ட் செய்வதில்லை. செய்யவேண்டியதை செய்து விட்டு பலனை இறைவனிடமிருந்து வருவதாக ஏற்கிறது. இப்படி உள்ள மனமே எதிர்மறை உணர்ச்சிகளைஎண்ணங்களை விலக்குகிறது. தன்மூட்களைத் தன் வசம் வைத்துள்ளது.

இதனால் இறைவனிடம் அளவில்லாத பக்தி கொள்ள முடிகிறது. அந்த மனமே நானும் இறைவனும் வேறல்ல என்ற அறிவைப் பெற தகுதி பெற்றதுநாமும் நம் மனதின் விருப்பு, வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இறைவனிடம் பக்தி செலுத்தி பலன் அடைவோம்.