நண்பனின் மனைவி மீது தீராத மோகம்! இளைஞன் அரங்கேற்றிய விபரீதம்!

டெல்லியில் நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவால் நண்பனை ரயில் தண்டவாளத்திற்கு அழைத்துச் சென்று தலையில் அடித்து அரை மயக்க நிலையில் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜாகிரா பகுதியை சேர்ந்த குல்கேஷ் கடந்த ஜூன் 25ஆம் தேதி தனது நண்பரான தல்பீரை ரயில் பாதைக்கு அழைத்துச் சென்று இருவரும் மது அருந்தியுள்ளனர்,பிறகு அருகில் உள்ள செங்கல்லை எடுத்து தல்பீர் தலையில் பலமாக அடித்துள்ளார்.

அரை மயக்க நிலையில் இருந்த தல்பீரை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். இதையடுத்து குல்கேஷ் நல்லவன் போல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அந்த தகவலில் ரயில் தண்டவாளத்தில் தனது நண்பர் அடிபட்டு கிடைக்கிறார் எனவும் அவரை காப்பாற்ற உதவி செய்யுங்கள் எனவும் காவல்துறையிடம் உதவி கேட்டுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கினர்.

 இந்நிலையில் அவரது செல்போனை பார்த்த போது கடைசியாக குல்கேஷ்சிடம் பேசி உள்ளது தெரியவந்தது. இதையடுத்து குல்கேஷ் என்பவரை விசாரித்தபோது அவர் கூறியதாவது: தல்பீர் தனது நெருங்கிய நண்பர் எனவும் அடிக்கடி வீட்டிற்கு வந்து போவதாகவும் தெரிவித்தார் இந்நிலையில் அவரது மனைவிக்கும் எனக்கும் இடையே நெருக்கமானது இதையடுத்து நான் அவரது மனைவியும் பூஜாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினேன்.

இந்நிலையில் அதற்கு இடையூறாக தல்பீர் இருந்ததால் கொலை செய்ததாக போலீசார் வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குல்கேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே இடத்தில் போலீசாரை திசை திருப்புவதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.