தன்னை கடித்த பாம்பை பதிலுக்கு கடித்துக் கொன்ற விவசாயி! பிறகு நேர்ந்த விபரீதம்!

தன்னைக் கடித்த பாம்பை கடித்துக் கொன்ற விவசாயின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


70 வயது விவசாயியான பர்வத் காலா பரியா தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது அவரை ஒரு பாம்பு கடித்தது. பாம்பு கடித்ததால் ஏறத் தொடங்கிய விஷத்தை விட பாம்பின் மீது பரியாவின் ஆத்திரம் அதிவேகத்தில் ஏற அந்தப் பாம்பைப் பாய்ந்து பிடித்த அவர் அதனைக் கடித்துக் குதறினார்.

இதில் உயிரிழந்த அந்தப் பாம்பை உறவினர்கள் எரித்துவிட்டதாக பரியாவின் மருமகள் தெரிவித்தார். இதனிடையே பாம்பு கடித்ததில் விஷம் உடல் முழுவதும் வெகுவாகப் பரவிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலில் ஒரு அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதி இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டார்.

இதையடுத்து அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலன் இல்லாத நிலையில் வேறு ஒரு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். அதற்குள் காலம் கடந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.