ஒரே நேரத்தில் 2 மாணவிகளுடன் ஜலக்கிரீடை! பிறகு அரங்கேறிய பயங்கரம்! 10 மாதங்களுக்கு பிறகு சிக்கிய ஜவுளிக்கடை ஊழியர்!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 2 பள்ளி மாணவிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் தற்போது அவர்களுடன் பழகி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அந்தியூர் அருகே மைக்கேல் பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஓவியா மற்றும் மற்றும் ஜி.எஸ்.காலனியை சேர்ந்த சுகந்தி ஆகியோர் அரசுப் பள்ளியில் படித்து வந்த நிலையில் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக விடுமுறை நாட்களில் துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளனர்.

அந்த கடையில் வந்த வாடிக்கையாளராக வந்த செங்கல் சூளை தொழிலாளி நந்தகுமாருக்கும், சுகந்தி, ஓவியாவுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2 மாணவிகளையும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி அத்தாணி சவண்டப்பூர் பவானி ஆற்றுக்கு அழைத்து சென்றுள்ளார் நந்தகுமார். அங்கு மாணவிகளுடன் செல்பி எடுத்துவிட்டு அந்த படங்களை நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார் நந்தகுமார்.

பின்னர் 3 பேரும் ஆற்றில் குளிக்க சுகந்தி, ஓவியா ஆகியோர் நீச்சல் தெரியாமல் அடித்து செல்ல நந்தகுமார் மட்டும் கரையேறி உள்ளார். இதை வெளியில் சொல்ல பயந்து கொண்டு கடந்த 8 மாதங்களாக அமைதியாக இருந்துள்ளார் நந்தகுமார்.

இதற்கிடையே நந்தகுமார் செல்போன் காணாமல் போக அதில் இருக்கும் ஓவியா, சுகந்தி போட்டோக்களை யாராவது பார்த்துவிட்டு போலீசில் சொன்னால் என்ன செய்வது என்று தானாகவே ஒரிச்சேரிப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளியங்கிரியிடம் சரண் அடைந்துள்ளார் நந்தகுமார்.

இதனையடுத்து ஆப்பக்கூடல் போலீசார் நந்தகுமார் மீது இளம்பெண் கடத்தல், தகவல்களை மறைத்தது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்தனர்.