ஓரினச்சேர்க்கை! புது மாப்பிள்ளையின் பின்புறம் பீர் பாட்டிலை சொறுகிய நண்பர்கள்!

மகாராஷ்டிரம் மாநிலத்தில் ஒரு ஆணின் ஆசனவாயில் பீர்பாட்டில்களையும், பல்குத்தும் குச்சிகளையும் செலுத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த நபருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் நாசிக்கில் உள்ள நண்பர்கள் சிலரை நேரில் அழைப்பதற்காக சென்றார். அங்கு ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்த அவர், பத்ரகாளி என்ற இடத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு ஆட்டோவில் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

அப்போது வழியில் ஆட்டோவை மறித்து நண்பர்கள் சிலர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏறியதாகவும், அதனை எதிர்த்து அவர் போராடியதையடுத்து கத்திமுனையில் அவர்கள் அவரை மிரட்டிப் பணியச் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பஞ்சவதி என்ற இடத்திற்கு கடத்திச் சென்றனர். 

அங்கு மது அருந்திய அவர்கள் அனைவரும் அவரை தாக்கி அவரது செல்ஃபோனையும் 10 ஆயிரம் ரூபாயையும் பறித்துக்கொண்டதோடு வலுக்கட்டாயமாக தரையில் படுக்க வைத்து அவரது கீழாடையை அகற்றியதாகக கூறப்படுகிறது. 

அடுத்தகட்டமாக பீர் பாட்டில், பல்குத்தும் குச்சிகள் ஆகியவற்றை அவர்கள் அவரது ஆசன வாயில் செலுத்தி சித்திரவதை செய்ததாகவும், கருணையே இன்றி சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பிய அவர் ஒரு கோவிலில் தஞ்சம் அடைந்த நிலையில் அங்கிருந்த முதியவர் ஒருவர் பிளாஸ்டிக் கவரைக் கொடுத்து போர்த்திக் கொள்ளச் செய்த நிலையில், பாதிக்கப்பட்டவர் மறுநாள் தனக்கு நேர்ந்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றானர்.