அத்தையுடன் தகாத உறவு..! மருமகனை கண்டித்த தாய் மாமன்..! பிறகு நிகழ்ந்த படுபயங்கரம்! நெல்லை திகுதிகு!

வேலையின்றி சுற்றித்திரியும் மருமகனுக்கு அடைக்கலம் கொடுத்த பாவத்திற்கு தாய்மாமன் சிறைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்ட அவலம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


கல்லிடைக்குறிச்சிரயை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் வேலைக்கு எங்கும் செல்வதில்லை. இதனால் அவரை அழைத்து சென்று அண்ணன் வீட்டில் விட்டுள்ளார் அவரது தாய் மாரியம்மாள். கடந்த 2 ஆண்டுகளாக மருதம்புத்தூரில் தாய்மாமன் ஆதிமூலத்தின் வீட்டில் தங்கியிருந்து ஆடுகளை மேய்த்து வந்தார் நம்பிராஜன். இந்நிலையில் நம்பிராஜனுக்கும் தாய்மாமா ஆதிமூலத்தின் மனைவிக்கும் முறையற்ற உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதை அறிந்த ஆதிமூலம் இருவரையும் பலமுறை கண்டிக்க அவர்கள் கேட்பதாக இல்லை. எனவே நம்பிராஜனை இனியும் உயிரோடு வைத்திருந்தால் பிரயோஜனம் இல்லை என நினைத்த ஆதிமூலம் கடந்த 1ம் தேதி நேராக ஆலங்குளத்தில் உள்ள தனது சொந்தமான ஆட்டுக்கிடைக்கு சென்றார். அங்கிருந்த நம்பிராஜனிடம் தன்னுடைய மனைவியுடனான தவறான உறவு வேண்டாம் என எச்சரித்தார்.

ஆனால் தங்களது காதல் புனிதமானது என நம்பிராஜன் கூற ஆத்திரம் அடைந்த ஆதிமூலம் அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து ஒரே போடாக போட்டார் நம்பிராஜன் மீது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் நம்பிராஜன். பின்னர் மயங்கிய நிலையில் கிடந்த நம்பிராஜனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து தலைமறைவான தாய்மாமன் ஆதிமூலத்தை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை வழக்குப் பதிந்துள்ளனர்.

முறையற்ற உறவால் மாரியம்மாள் தனது மகனை இழந்துள்ளார். ஆதிமூலம் சிறைக்கு சென்று தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து விட்டார். ஆதிமூலத்தின் மனைவியின் தவறான நடத்தையால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்.