என் காதலியை பத்திரமா பாத்துக்கங்க! வாட்ஸ் ஆப் வீடியோ வெளியிட்டு செல்போன் டவரில் இருந்து குதித்த காதலன்! அதிர வைக்கும் காரணம்!

சேலத்தில் இளைஞர் ஒருவர் தான் காதலித்து வந்த பெண்ணின் வீட்டில் தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பெண்ணின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் வாட்ஸ் ஆப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டு செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.


சேலம் மாவட்டம் சங்ககிரி புள்ளாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர், இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த  பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் காதல் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவர அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பலமுறை எச்சரித்தும் அவர்கள் காதலை கைவிடுவதாக தெரியவில்லை இந்நிலையில் ஆத்திரம் அடைந்த பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ரவிசங்கர் என்பவரை மிரட்டியுள்ளனர். இதையடுத்து அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டிற்குள்ளேயே வைத்துள்ளனர். இதையடுத்து தனது காதலியை காண ரவிசங்கர் அவர்களது வீட்டிற்கு சென்றபோது அவரது உறவினர்கள் பலரும் அவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ரவிசங்கர் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து வாட்ஸ் ஆப்பில் " தனது காதலியின் உறவினர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தங்களது காதலை பிரித்து வைத்து விட்டதாகவும்" அதனால் தான் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தனது காதலியை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும் வீடியோ ஒன்றை பதிவிட்டு ரெட்டிபாளையம் அருகே உள்ள செல்போன் டவர் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றும் இந்த தற்கொலைக்கான காரணங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.