தகாத உறவு போதும்! திருந்திய அண்ணன் மனைவி! ஆத்திரத்தில் தம்பி அரங்கேற்றிய கொடூரம்!

திருப்பூரில் நெருங்கிய உறவினர் ஆள் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 தற்பொழுது இருக்கும் நாட்டு நடப்பின்படி சண்டைகளால் பிரியும் குடும்பங்களை விட கள்ளக்காதலால் பிரியும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சில குடும்பங்களில் மரணங்கள் கூட ஏற்படுகிறது.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த திருமலைசாமி என்பவருக்கும் அவரது மனைவி சுமதிக்கும் திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் இருவரும் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தினந்தோறும் கூலி வேலைக்கு சென்று வரும் பொழுது சுமதிக்கும் திருமலைசாமியின் தம்பி மகனான கணேசன் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி வேலைக்கு செல்லாமல் சுமதி அவருடன் நேரம் செலவிடுவதும் உறவினர்களுக்கு தெரிய வர அவரை பலமுறை கண்டித்துள்ளனர். இதனால் சுமதி கணேசனுடன் திடீரென இனி பேசிக் கொள்ள வேண்டாம் என உறவை முடித்துக் கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணேசன் திடீரென சுமதி வீட்டிற்குள் சென்று ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய் என்று ஆவேசத்துடன் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணேசன் சுமதியை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் சுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குறிப்பிட்ட காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.