ஹோட்டல் அறையில் காதலனுடன் தங்கியிருந்த காதலிக்கு ஏற்பட்ட விபரீதம்! பதை பதைக்க வைக்கும் சம்பவம்!

ஹைதராபாத் ஓட்டல் அறையில் பெண்ணை கழுத்தை அறுத்த நபர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்ட நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஹைதராபாத்தின் தில்சுக் நகரில் உள்ள பிருந்தாவன் ஓட்டலில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பெண் கழுத்து அறுக்கப்பட்டது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் ஓட்டலுக்கு வந்த போது அவர்கள் தங்கியிருந்த அறையின்  தரையிலும், படுக்கையிலும் மற்றும் அறைக்கு வெளியெ தாழ்வாரம் நெடுகிலும் ரத்தக் கறை காணப்பட்டது.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தாழ்வாரத்தில் கிடந்த பெண் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அந்த நபரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அந்த நபரை உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசாரின் விசாரணையில் நெல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற நபர் ஹைதராபாத்துக்கு வந்து ஓட்டலில் தங்கியதும், பிறகு அவரது காதலியான அந்தப் பெண்ணை விடுதிக்கு வந்து தன்னை சந்திக்குமாறு அழைத்ததும் தெரிய வந்தது. அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் அப்போது அந்த நபர் கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்தில் அறுத்திருக்கக் கூடும் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அறைக் கதவைத் திறந்துகொண்டு  வெளியே ஓடிவந்த பெண் கூச்சலிட்டதையடுத்து, ஓட்டலில் இருந்தவர்கள் அங்கு திரண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.