சென்னையில் தன்னை காதலித்து விட்டு வேறொரு நபரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்த காதலியை காதலன் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்நிலையில் அவரது காதலனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைனில் ஆர்டர் செய்து விஷம்! கல்யாணத்துக்கு தயாரான காதலிக்கு காதலினால் ஏற்பட்ட கொடூரம்!
சென்னை சவுகார்பேட்டை வள்ளியப்பன் தெருவை சேர்ந்தவர் சுமர் சிங் 23, இவர் சென்னை கோவிந்தன் தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் அப்போது அவருக்கும் அந்த இப்பகுதியில் கல்லூரி சென்று வரும் கல்லூரி மாணவியான காஜல் 21, என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது முதலில் சுமர் சிங்கின் காதலை மறுத்த காஜல் சில நாட்கள் அவர் பின்னே சுற்றி திறந்த நிலையில் காதலை ஒப்புக் கொண்டுள்ளார்.
காஜல் பணக்கார பெண் என்பதால் சுமர் என்பவருக்கு அடிக்கடி பண உதவிகளையும் செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் வெளியூர்களுக்கு பலமுறை சென்று வந்தனர் மற்றும் ஒரே அறையில் தங்கி இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதல் பெற்றோருக்கு தெரிய வரவே அதற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சுமர் சிங் பணக்காரன் இல்லை எனவும் அவரை உனக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என காஜல் வீட்டில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் பல நாட்களாக பேசிக்கொள்ளவில்லை இதே இடத்தில் சுமர் சிங் போன் மூலம் தொடர்பு கொண்டாலும் காஜல் அதற்கு சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமர் சிங் அவரது வீட்டிற்கு நேராக சென்றுவிட்டார்.
சென்று அவரிடம் கேட்டபோது எனக்கு வீட்டில் மாப்பிள்ளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அவரது பெற்றோர்கள் கூறும் நபரைத்தான் தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக காஜல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமர் சிங் கடைசியாக உன்னிடம் எதுவும் பேச வேண்டும் என அழைத்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து தானும் விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடந்த மாதம் ஜூலை 10 ஆம் தேதி இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு சென்றுள்ளனர் அப்போது மாலை 3.45 மணியளவில் ரூமுக்குள் சென்று அவர்கள் காலை வரை வெளியே வராத நிலையில் விடுதி உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது காஜல் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்துள்ளார். அருகில் சுமர் சிங் மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து விடுதி உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் சுமர் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காஜல் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து சுமர் சிங் கண் விழித்ததும் அவரிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் அவர் கூறியதாவது: நானும் காஜல் என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களது பெற்றோரும் அப்பெண்ணிற்கு வேறொருவர் மணமகனை முடிவு செய்ததால் ஆத்திரத்தில் தான் இவ்வாறு செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் விசாரிக்கையில் முதலில் இருவரும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த நிலையில் குளிர்பானத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்ற மயக்க மருந்து கலந்து கொடுத்ததாகவும் அதனால் அரை மயக்க நிலையில் காஜல் எழுந்து ரூமை விட்டு வெளியே சென்றபோது அவரின் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளதாக சுமர் சிங் ஓப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை குற்றப் பிரிவின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.